இளையராஜா – 75 விழாவின் 2 வது நாளான நேற்று ரஜினி, கமல், ஷங்கர், உள்பட பலர் இளையராஜாவை வாழ்த்தினார்கள்.

விழாவில் நடிகர் கமல் பேசுகையில்,  ரஜினிக்கு இசையமைத்து போல் எனக்கு இசையமையுங்கள் என்று நான் கேட்டுள்ளேன். மேலும் இங்கு ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். நான் அரசியலுக்கு வர காரணம் இளையராஜா தான் இவரின் அறிவுரை தான். முதலில் ஆலோசனை கூறியதும் இவர் தான்.

ஒரு அண்ணன் வேண்டாம் என்றார் (சந்திரஹாசன்). மற்றொரு அண்ணன் வேண்டும் என்றார் அவர் இளையராஜா. இவருடைய 100 படங்களில் பாடியுள்ளேன். இவர்தான் என் குரு. என்றார். தொடர்ந்து கமல், இளையராஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.