எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தில் நடித்த நடிகர் நானி, தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நானி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இனிமேல் அவர் தனது சொந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் மட்டுமே நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் ஃபேஸ்புக் வீடியோ ஒன்றில் இதுகுறித்து விளக்கிய நானி, ‘தனது சொந்த தயாரிப்பில் தான் படம் நடிக்க மாட்டேன் என்றும், புதுமுகங்களை அறிமுகம் செய்யவே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நானியின் இந்த போல்டான முடிவை தெலுங்கு திரையுலகம் வரவேற்றுள்ளது.