நாயகிக்கு முத்தமிட 19 டேக் வாங்கிய ஹீரோ

பர்மா மற்றும் ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்களை இயக்கியவர் தரணிதரன். இவர் தற்போது ராஜா ரங்குஸ்கி என்ற் படத்தை இயக்கி வருகிறார். இதில் மெட்ரோ’ பட  புகழ் ஷிரிஷ் மற்றும் ‘வில் அம்பு’ புகழ் சந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்’.  சக்தி வாசன் மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி, தரமணியில் பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், திட்டமிட்டதை விட எங்களின் படப்பிடிப்பு துரித வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பை  நாங்கள் முடித்து இருக்கின்றோம், மேலும் எங்களின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இதே வேகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றோம். கதாநாயகன் ஷிரிஷ்  தன்னுடைய கதாபாத்திரத்தில்  கனகச்சிதமாக நடித்து  வருகிறார், ஆனால் காதல் காட்சிகளில் மட்டும் அவருக்கு கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டுவிடுகிறது. கதாநாயகிக்கு முத்தமிடும் காட்சியில் ஏறக்குறைய 19 டேக்  வாங்கி இருக்கிறார். அநேகமாக அவர் வேண்டுமென்றே தான் அவ்வாறு செய்திருப்பார் என்று தோன்றுகிறது என்று கிண்டல் செய்தார் இயக்குநர் தரணிதரன்.