நாளை முதல் எமன் பாடல்கள்

03:07 காலை

#Vijayantony #Yeman #YamanReview

இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இன்று முன்னணி நடிகர்கள் பட்டியலில் சேர்ந்தவர் விஜய் ஆண்டனி. நான் படத்திலிருந்து ச்மீபத்தில் வெளியான சைத்தான் வரை வெற்றி படங்களாகவே கொடுத்துவருபவர்.

இந்நிலையில் விஜய் ஆண்டனியும்,  நான் பட இயக்குநர் ஜீவா சங்கரும் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கும் திரைப்படம் ‘எமன்’. ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து இந்த படத்தை  தயாரித்துள்ளனர்.

வர்த்தக ரீதியாக தனக்கென்று தனி இடம் பிடித்து இருக்கும் விஜய் ஆண்டனியின் அபார வளர்ச்சி, “நான்”  படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு இணைந்து வரும் விஜய் ஆண்டனி – ஜீவா ஷங்கர் கூட்டணி, விநியோகம் மற்றும் விளம்பர யுக்தியை மிக சிறப்பாக  கையாளும்  ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’  என்று ஒரு வெற்றி படத்துக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகிறது  ‘எமன்’ திரைப்படம். சமீபத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த திரையுலகின் பாராட்டுகளையும் பெற்று இருக்கும் ‘எமன்’ படத்தின் டீசரே அதற்கு சிறந்த முன் உதாரணம்.

விஜய் ஆண்டனி இசையமைத்து நடித்திருக்கும் ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற  நாளை (பிப்ரவரி 4 )ஆம் தேதி , சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.

The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812