tik-tik-tik

ஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ‘டிக் டிக் டிக்’ படம் விரைவில் வெளியாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் சக்தி செளந்திரராஜன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என்றும் இந்த டிரைலரின் ரன்னிங் டைம் 2.19 நிமிடங்கள் என்றும் பதிவு செய்துள்ளார்

தமிழ்த்திரையுலகின் முதல் விண்வெளி திரைப்படமான ‘டிக் டிக் டிக்’ படத்தில் ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.