Connect with us

செய்திகள்

நீதிபதி தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றியதற்கு  எதிர்ப்பு: தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள். இன்று  நீதிமன்ற புறக்கணிப்பு

Published

on

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றியதற்கு

எதிர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றதலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயா உயர்

நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள்

இன்று  நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமானி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்

பதவி ஏற்றார்.

இவரை, நிர்வாக காரணத்துக்காக மேகாலயா நீதிமன்த்துக்கு மாற்றி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள்

குழு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி

விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தன்னுடைய நீதிபதி பதவியை தஹில் ரமானி

ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேற்று அவர் வரவில்லை.

பதிவுத்துறை ஏற்கனவே தயாரித்த வழக்கு விவர பட்டியலின் அடிப்படையில் அவரும், நீதிபதி

எம்.துரைசாமியும் நேற்று 75 வழக்குகளை விசாரிப்பதாக இருந்தது.

ஆனால், ராஜினாமா கடிதம் அனுப்பியதை தொடர்ந்து தலைமை நீதிபதி உயர் நீதிமன்றத்துக்கு

வராததால் அவர் தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டிய வழக்குகளை மூத்த நீதிபதி வினீத்

கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் விசாரிப்பார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற

பதிவுத்துறை நேற்று காலை அறிவித்தது. அதேபோல, நீதிபதி எம்.துரைசாமி தனியாக விசாரிக்க

வேண்டிய வழக்குகளின் பட்டியலையும் வெளியிட்டது.

இதற்கிடையில், தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றிய

உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று

ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை உயர் நீதிமன்ற நுழைவுவாயிலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மூத்த வழக்கறிஞர்

ஆர்.வைகை, வழக்கறிஞர்கள் விஜயகுமார், என்.ஜிஆர்.பிரசாத்,
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் ஆர்.சுதா, செயலாளர்

ஆர்.கிருஷ்ணகுமார், வக்கீல்கள் வி.சுரேஷ், நாகஷீலா, சீனிவாசராவ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட

வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்  சங்கத்தின் கூட்டம், அதன் தலைவர்

வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அப்போது தலைமை நீதிபதியை

இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானியை இடமாறுதல் செய்தது இந்திய அரசியலைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

ஆகும். எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் விதமாக இன்று சென்னை உயர் நீதிமன்ற

உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகக்கூடாது என்றும்,  நீதிமன்றத்தை

புறக்கணிக்க வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டு உள்ளது” என்று கூறப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வழக்கறிஞர்கள்  இன்று  நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில்

ஈடுபடுகிறார்கள்.

செய்திகள்23 mins ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்31 mins ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்1 hour ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்1 hour ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்2 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்11 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்12 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்13 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்3 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்4 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்2 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending