நீ முன்பு போல் இல்லை. என்னிடம் சரியாக பேசுதில்லை என யாஷிகா கவினிடம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவின் காதல் மன்னனாக வலம் வருகிறார். அபிராமி, சாக்‌ஷி, லோஸ்லியா என ஒருவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஆனால், காதல் என வெளிப்படையாக கூறாமல், என் அத்தை பெண்களாக நினைத்து பழகுகிறேன் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட பிக்பாஸ் புரமோ வீடியோ ஒன்றில் ‘ நீ முன்பு போல் இல்லை. உன்னிடம் மாற்றங்களை பார்க்கிறேன். லோஸ்லியாவிடம் பேசுவதற்காக என்னை தவிர்கிறாய் என கவினிடம் சாக்‌ஷி கூற, இல்லை நான் மாறவில்லை என கவின் அவரை சமாதானப்படுத்தும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.