நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அதிகாலை நேரங்களில் ஆளில்லாத வீடுகளில் புகுந்து கொள்ளைகள் நடந்துவந்தன.அந்தந்த பகுதிக்காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உத்திரவுப்படி காவல்துறைக்கு சவாலாக இருந்த பிரபல கொள்ளையனை போலீசார் தேடிவந்த நிலையில் 25ஆம் தேதி சொக்கம்பட்டி காவல் நிலையம் எல்கைக்கு உள்பட்ட பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் கள்ளம் புலியை சேர்ந்த கோவிந்தன் மகன் ரவிகார்த்திக் என்பவர் அரிவாளைக் காட்டி அந்த வழியே சென்ற நபரிடம் வழிப்பறி செய்துவிட்டு தப்பிவிட்டார்.இது குறித்து அந்த நபர் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து புளியங்குடி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் தலமையில் போலீசார் குற்றவாளியை தேடிய நிலையில் டி.என் புதுக்குடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது அந்தப்பகுதியில் பதுங்கி இருந்தஒருவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் தான் ரவிகார்த்திக் என்பது தெரியவரவே அவனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவன் நெல்லை மாவட்டத்தில் வீ.கே.புதூர்,அச்சன்புதூர்,குற்றலம்,செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோயில், சுரண்டை,புளியங்குடி, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களிழும் ,விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இவன் ஆளில்லாத வீடுகளை பார்த்தும்,அதிகாலை விட்டு வாசலில் கோலமிடும் பெண்களிடமும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டது தெரியவந்தது. மேலும் கொள்ளையடித்த பணத்தை கொண்டு மனைவி பிரியங்கா பெயரில் சுமார் 25 இலட்சம் மதிப்பில் சொகுசு பங்களா ஒன்று கட்டியுள்ளதும்,வீட்டில் 193 பவுன் தங்க நகை கள் இருப்பதையும் ஏற்கனவே இவன் 2016ஆம் ஆண்டு ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்து தொடர்ந்து பல்வேறு திருட்டுக்களில் ஈடுப்பட்டதும்.இவனை போலீசார் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் தவித்து வந்ததும் அவன் போலீசாரிடம் தெரிவித்ததைதொடர்ந்து அவனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் மீட்கபட்டு அவனை கைது செய்து போலீசார் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையனிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் மொத்த மதிப்பு 45 இலட்சம் ரூபாய் ஆகும்.நெல்லை மாவட்டத்தில் அதிகளவில் நகைகள் பிடிப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் காவல்துறைக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து உள்ளனர். நெல்லைமாவட்டத்தில் ஏராளமான கொள்ளை சம்பவங்களில் துப்பு துலக்கி கொள்ளையர்களை கைது செய்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலமையில் போலீசார் தான் இவனையும் கைது செய்தனர்.என்பது குறிப்பிடத்தக்க து.