சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ திரைப்படத்தின் மரணமாஸ் தலைவர் குத்து பாடல் நேற்று வெளியாகிய நிலையில் இன்று விஜய்சேதுபதியின் மாஸ் போஸ்டர் ஒன்று வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் வில்லன் கேரக்டர் வலுவாக இருக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுவிடும். சமீபத்திய உதாரணங்கள் ‘இரும்புத்திரை மற்றும் 2.0

அந்த வகையில் ‘பேட்ட’ படத்தில் தலைவர் ரஜினிக்கு மாஸ் நடிகர் விஜய்சேதுபதி வில்லன் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இன்று விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயர் மற்றும் தோற்றம் வெளியாகவுள்ளதால் விஜய்சேதுபதி ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.