ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள ‘பலூன்’ படம் ரெடியாகி பல மாதங்களாகிவிட்டன. இப்படம் சென்சார் ஆகி பல வாரங்களாகிவிட்டன. படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தில் எந்த காட்சிகளையும் வெட்டச் சொல்லவில்லையாம்.அதோடு பலூன் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சினிஷ் இயக்கத்தில் ஜெய், ஜனனி ஐயர், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள ‘பலூன்’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையில், அனிருத் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

      பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவினால் பிரபலமான நீங்க ஷட்அப் பண்ணுங்க என்ற வரியுடன் படத்தின் புரொமோஷனுக்காக உருவாக்கப்பட்ட இந்த பாடலை ‘நெருப்புடா’ பாடல் புகழ் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை அஜித்தாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெய், இந்தப் படத்தின் புரமோஷனுக்கு வர மறுத்துவிட்டார். இப்போது அஞ்சலியும் புரமோஷனுக்கு வர மாட்டேன் என்கிறாராம். இதனால் தயாரிப்பாளர் கண்ணீர் வடிக்காத குறையாக இருக்கிறாராம்.