ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

பல்கேரிய பைக் ரேசரை பதற வைத்த அஜித்

05:15 மணி

அஜித்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வரும் சமயத்தில் அங்குள்ள பைக் ரேசரை அஜித் அசர வைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அஜித் ஒரு பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் சொந்தமாக பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை வைத்துள்ளார். உலகின் எந்த விலையுயர்ந்த பைக்கையும் ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் தல 57 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்தின் ஸ்டண்ட் காட்சிகளுக்கு டூப் போட்ட பல்கேரிய பைக் ரேசரும், ஸ்டண்ட் கலைஞருமான ஜோரியன் பொனமரெப் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். ஜோரியன் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பைக் வீலிங் செய்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை எடுத்தது அஜித் தானாம். அவர் பைக் வீலிங் செய்தபோது அஜித் அந்த புகைப்படத்தை எடுத்து, இவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதைப் பார்த்து வியந்துபோன ஜோரியன், அஜித் சிறந்த மனிதர். என்னுடைய பைக்கில் பயங்கரமான ஸ்டண்ட்களை செய்துள்ளார். அவருடைய எளிமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இப்படத்தில் அஜித் இண்டர்போல் ஆபீசராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்ஷரா ஹாசனும் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

(Visited 36 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com