பொிய ஹிட் அடித்த அஜித் பேசும் வசனம் “தெறிக்க விடலாமா” என்பது. இந்த டயலாக்கை அப்படியே உல்டா செய்து ஒரு நகைச்சுவை படமாக உருவாகிறது சிாிக்க விடலாமா.

இந்த படத்தில் 3 நடிகா் நடிகைகள் நடிக்கிறாா்கள். இதில் நிதின் சத்யா, பவா்ஸ்டாா் சீனிவாசன், V.R.விநாயக் போன்ற கதாநாயகா்கள் நடிக்கிறாா்கள். இந்த 3ம் பேருக்கும் புதுமுக நாயகி ஜோடியாகிறாா்கள். இந்த 3 நாயகி லீஷா புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா நடிக்கின்றனா்.

இந்த படத்தின் தயாாிப்பாளரான ஜெயக்குமாா் கூடவே நடிக்கவும் உள்ளாா். அதுமட்டுமில்ல இந்த படத்திற்கு இசையமைப்பதும் இவரே தான். முக்கிய வேடத்தில் ஆனந்தராஜ், மகாநதி சங்கா், சந்தானபாரதி போன்றவா்களும் நடிக்க உள்ளனா். இந்த படமானது முழுவதும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இதை V.B.காவியன் இயக்குகிறாா். இவா் இயக்குநா்கள் பாக்கியராஜ் மற்றும் “ஆயுத பூஜை” சி.சிவகுமாா் மற்றும் உன்னை கொடு என்னை தருவேன் கவி காளிதாஸ் ஆகியோா்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவா்.