பாகுபலியாகிய நான்…பிரபாஸ் உருக்கமான பேச்சு..

பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸ் சினிமா ரசிகர்களுக்கும், அப்படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான பாகுபலி2 சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதுவரை இப்படம் ரூ.1000 கோடியை வசூலித்திருப்பதாக தெரிகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தபடம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோ பிரபாஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

என் மீது இத்தனை அன்பு செலுத்தி வரும் என்னுடை ரசிகர்கள் அனைவரும் என்னுடைய நன்றி. பாகுபலி படத்தில் என்னால் முடிந்த வரை கடுமையாக உழைத்தேன். அதன் விளைவாக, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தற்போது என்னிடம் அன்பு காட்டி வருகிறார்கள். பாகுபலி படத்தில் நடித்தது ஒரு நீண்ட பயணம். என்னை நம்பி பாகுபலி என்ற ஒரு சிறந்த கதாபாத்திரத்தை எனக்கு அளித்த ராஜமௌலிக்கு பெரிய நன்றி” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.