ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்து இந்தியா முழுவதிலும் பல சாதனைகளை படைத்த படம் பாகுபலி. வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் இந்தப் படம் கவர்ந்தது. பாகுபலி புடவை, பாகுபலி பட்டாசு, பாகுபலி பை, பாகுபலி குடை என வரிசையில் இப்போது பாகுபலி விருந்தும் இணைந்துள்ளது. ஆம், புனேவில் உள்ள ‘ஹவுஸ் ஆஃப் பராத்தா’ என்னும் கடையில் இந்த ‘பாகுபலி தாலி’ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

      வட இந்திய உணவுப் பொருளான பரோட்டாவில் பல ரகங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. முக்கியமாக ‘கட்டப்பா பிரியாணி’, ‘தேவஸேனா பரோட்டா’, ‘பல்வாள்தேவா லஸி’, சிவகாமி ஷாஹி பாக்வான் மற்றும் பெரிய ‘பாகுபலி பரோட்டா’ போன்ற பல உணவு வகைகள் இதில் இருக்கின்றன. நடுவில் பீட்ஸாவில் போல் வைக்கப்பட்டு இருக்கும் இந்த பாகுபலி பரோட்டாவின் மேல் சீஸ் மற்றும் வெண்ணெய் தூவிப் பார்ப்பதற்கே மிகவும் சுவையாக இருக்கிறது. ஆனால் இந்த விருந்தை ஒருவரால் நிச்சயம் தனியே சாப்பிட்டு முடிக்க முடியாது. குறைந்தது 5 நபராவது ஒரு பிளேட் பாகுபலி விருந்தை வயிறு முட்டச் சாப்பிடலாம். ஜி.எஸ்.டி எல்லாம் சேர்த்து ஒரு பிளேட்டின் விலை ரூ.1,700-ஆம்.