Bigg Boss 2 conduct in ovia

பிக்பாஸ்-2 இன்னும் சில தினங்களில் முடியவுள்ள நிலையில், இதில்
யார் வெற்றி பெறுவார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக
உள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் முதல் சீகன் பிக்பாஸ்
நிகழ்ச்சியன் பங்கேற்பாளர்கள் விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகை ஓவியா 2வது சீசன்
துவங்கிய நேரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக மட்டும்
வந்திருந்து கிளம்பிவிட்டார்.

இந்நிலையில், பிக்பாஸ் 2 நிறைவை எட்டியுள்ள நிலையில், முதல்
சீசன் போட்டியாளர்கள் பலர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
ஆனால் ஓவியா மட்டும் இதுவரை வரவில்லை.

இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில்
அளித்துள்ள நடிகை ஓவியா தான் விரைவில் இரண்டாவது சீசன்
வீட்டுக்குள் வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதனால் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில்
உள்ளனர்.