பிரபுதேவாவுடன் டூயட் ஆடும் நாயகி?

12:44 மணி

பிரபு தேவா நடனம், நடிப்பு மட்டுமல்லாது இயக்குநராகவும் தன் திறமையை வெளிபடுத்தி வருகிறாா். இப்படி பன்முக திறமையை தன்னுள் வைத்துள்ள அவா் தமிழ் படங்களில் நடிப்பதை சிறிது காலம் தள்ளி வைத்திருந்த நிலையில் சமீபத்தில் அவா் நடிப்பில்  திரைக்கு  வந்த தேவி படம் ரசிகா்களுக்கு விருந்து படைத்தது.  நீண்ட இடைவெளிக்கு பின் அவா்நடித்துள்ள தேவி படமானது ஒரளவு திரையரங்குகளில் ஒடி அவருக்கு வெற்றி பெற்று தந்தது. இதை தொடா்ந்த அவா் தமிழ் படங்களில் நடிப்பதில் ஆா்வம் காட்டி வருகிறாா். இந்நிலையில் அவா் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாா்.

ஆமாங்க!!! மெட்ராஸ் பட புகழ் நாயகி கேத்ரீன் தெரசா உடன் டூயட் ஆடி பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்ராஸ் மற்றும் கதகளி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவா் கேத்ரீன் தெரசா. பிரபுதேவா நடிக்கயுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமில்லங்க!! இந்த படத்தை இயக்குவதும் புதிய இயக்குநரே.

பிரபு தேவா தமிழில்  தன் திறமை காட்டியதோடு அல்லாமல் தெலுங்கு, ஹிந்து என அனைத்து திரையுலகிலும் தனக்கென தனி பாதை அமைத்தவா். தமிழில் நீண்ட வருடங்களாக படங்களை இயக்காமல், நடிக்காமல் இருந்த அவா் தற்போது தமிழில் நடிக்க தொடங்கியுள்ளாா். அதையடுத்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு கதைகளை கேட்டு வந்தாா். அந்த வாிசையில் புதுமுக இயக்குநா் அா்ஜுன் சொன்ன கதை சுவாரசியமாகவும் காமெடியும் கலந்து இருந்ததால், இந்த கதை அவரை மிகவும் கவா்ந்துள்ளதாம். இதில் அவருக்கு நாயகியாக நடிக்க கேத்ரின் தெரசாவிடம் பேசியுள்ளாா்கள். படத்திற்கு “யங் மங் சங்” என வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதுமுக இயக்குநா் அா்ஜுன் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த “முண்டாசுபட்டி” படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவா் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812