தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவின் 37-வது திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு இணையான கேரக்டரில் மோகன்லால் நடிக்க உள்ளாராம். மேலும், முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, ஆர்யா, பாலிவுட் நடிகர் போமன் இரானி மற்றும் கதாநாயகியாக சாயிஷா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு மோகன்லால் டான்ஸ் - வீடியோ

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ரவீந்தரும் இணைந்துள்ளார். 80-களில் ரஜினி, கமல் ஆகியோர் நடித்த தங்கமகன், ராம் லட்சுமண், பேர் சொல்லும் பிள்ளை படங்களில் வில்லனாக நடித்தவர்.

கடந்த 20 வருடங்களில் தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 2015-ல் மோகன்லால் நடித்த என்னும் எப்பொழுதும் மலையாள படத்திற்கு கதை எழுதியவர் ரவீந்தர். மேலும், மலையாளத்தில் அவ்வப்போது நடித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அழகு மகளை விபத்தில் கண் முன்னே பறிகொடுத்த இசையமைப்பாளர்

சுமார் 13 வரடங்களுக்குப் பின் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.