Connect with us

தமிழகம்

பெண் தொழிலதிபர் ரீட்டா தற்கொலையில் புதிய தகவல்கள்…குடும்பத்தகராறு காரணமாம்..

Published

on

 

சென்னை நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலையில் உள்ள பங்களா வீட்டில் குடியிருப்பவர் லங்காலிங்கம். இவர், பிரபலமான கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரின் மனைவிரீட்டா, இணை நிர்வாக இயக்குநராக இருந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் சென்னையில் உள்ளார். மகள், வெளிநாட்டில் உள்ளார்.

இந்தநிலையில், ரீட்டா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வீட்டின் மேற்பார்வையாளர் ஏசுபாதம் கொடுத்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுனாசிங், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன் மற்றும் போலீஸார், ரீட்டா தற்கொலை செய்து கொண்டஅறையில் சோதனை நடத்தினர். அப்போது, ஜன்னல் திரையைக் கொண்டு ரீட்டா, தற்கொலைசெய்தது தெரியவந்தது. அவரின் செல்போனில் ரீட்டா கடைசியாக யாரிடம் பேசினார் என்றுபோலீஸார் விசாரணை நடத்தினர்.

ரீட்டா தற்கொலை செய்யப்பட்ட தகவல் அந்தக் குடும்பத்தினரை மட்டுமல்ல கார் ஷோரூம்ஊழியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்குப்பிறகு ரீட்டாவின் சடலம்,அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரீட்டா தற்கொலை குறித்து தெரிவித்த நுங்கம்பாக்கம் போலீசார், இதுவரை நடந்த விசாரணையில்சில தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், கடந்த சில தினங்களுக்கு முன் தேனாம்பேட்டையில்உள்ள அலுவலகத்தில் நடந்த மீட்டிங்கில் லங்கா லிங்கமும் அவரின் மனைவி ரீட்டாவும்பங்கேற்றதாகவும், அப்போது கார் விற்பனையகத்தின் மேலாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டதாகவும், மீட்டிங்கில் ஆட்டோ மொபைல் துறை சந்தித்துவரும் பிரச்னைகள் குறித்துவிவாதிக்கப்பட்டதாகவும், அப்போது ரீட்டா, கார் விற்பனை குறித்து ஆலோசித்துள்ளார். அதில்,ரீட்டா கோபமாகப் பேசியுள்ளார். அதற்காக ரீட்டாவை லங்கா லிங்கம் கண்டித்துள்ளார் என்வும்தெரிவித்தனர்

கூட்டம் முடிந்தபிறகு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். ஆனால், லங்கா லிங்கம் வீட்டுக்குள்செல்லவில்லை. நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார். ரீட்டாமட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அப்போதுதான் அவர் தற்கொலை செய்துள்ளார். லங்காலிங்கத்திடம் ரீட்டா தற்கொலை குறித்து விசாரித்தபோது அவர், தேனாம்பேட்டையில் நடந்தமீட்டிங்கில், வீட்டுக்குச் சென்றபோது நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

தேனாம்பேட்டையில் நடந்த மீட்டிங்கில் பங்கேற்ற விற்பனையகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள்சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் அன்றைய தினம் நடந்த மீட்டிங் குறித்த விவரங்களைத்தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ரீட்டாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களும்தற்கொலை செய்துகொண்டதற்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் ரீட்டாவின்தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு,“ பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான்ரீட்டா தற்கொலைக்கான காரணம் தெரியவரும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக ரீட்டா தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது” என்றார்.

லங்கா லிங்கத்தின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ளராணிமகாராஜபுரம். சென்னை கோயம்பேட்டில் சொகுசு கார் நிறுவனத்தின் விற்பனை ஷோரூமைநடத்தினார். இந்த கார் ஷோரூமின் தலைமை அலுவலகம் தேனாம்பேட்டையில் உள்ளது. கார்விற்பனையில் லங்கா லிங்கம் கோலோச்சியதற்கு அவரின் மனைவியும் முக்கிய காரணம்.லங்கா லிங்கமும் ரீட்டாவும் இரண்டு கண்களைப் போல கார் ஷோரூம் வளர்ச்சிக்காகஉழைத்தவர்கள். ரீட்டா, யோகா, காரத்தே, டான்ஸ் என எப்போதும் சுறுசுறுப்பாகவே வலம் வந்தவர்.

அவர் எப்படி இப்படியொரு முடிவை எடுத்தார் என்ற கேள்வி அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் எழுந்துள்ளது. ரீட்டாவின் சடலத்தைப் பார்த்து ஊழியர்களும்உறவினர்களும் கதறி அழுதனர். லங்கா லிங்கத்துக்கும் அவரின் மகனுக்கும் ஆறுதல் கூறினர்”என்றார்.

0

அரசியல்1 min ago

தை பொறந்தால் வழிபொறக்கும் தொண்டர்களுக்கு சூசக பதில் சொன்ன ரஜினி…?

அரசியல்20 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்5 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்6 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending