Connect with us

சினிமா செய்திகள்

பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும் என்று விஜய் நினைத்து அதிமுகவை விமர்ச்சிக்கிறார்..!

Published

on

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கும் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் ஆடியோ விழாவில் விஜய் பேசிய கருத்துக்கள் மற்றும் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் ஆளும் கட்சியினருக்கு கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குறித்து, நடிகர் விஜயின் பேச்சுக்கு ஆளும் தரப்பில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில், கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலை மக்கள் நீதி மய்யமும், அமமுகவும் புறக்கணித்துள்ளது குறித்த கேள்விக்கு தினகரன், கமல் போன்றவர்கள் ஒரு காலக்கட்டத்தில் அரசியல்வாதிகள்’ என்று தெரிவித்தார்.

யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியா இருக்கும் என விஜய் பேசி உள்ளது குறித்த கேள்விக்கு, பதிலளித்த ஜெயக்குமார், ‘விஜயோ கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அவர்கள் வந்தால் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும். அதிமுக ஒரு பழுத்த மரம் பழுத்த மரம்தான் கல்லடி படும்’ என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

படத்திற்கு விளம்பரம் தேடவே ஆளும் தரப்பை விஜய் சீண்டுகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், ‘நான் இதனை மறைமுகமாக கூறுகிறேன். ஆனால் நீங்கள் நேரடியாகவே கேட்டுவிட்டீர்கள்’ என தெரிவித்தார். ‘ஆளும் தரப்பை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது’ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

darbar
செய்திகள்2 mins ago

தீபாவளி வந்தாச்சு! தர்பார் வெடி வாங்கீட்டீங்களா? – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்2 hours ago

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா: நீங்களே பாருங்க…

சினிமா செய்திகள்5 hours ago

எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

செய்திகள்6 hours ago

ரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை

செய்திகள்6 hours ago

இப்படியா சொன்னார் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்?- பரவும் தகவல்

உலக செய்திகள்7 hours ago

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வரி விதித்த அரசு..!!

செய்திகள்7 hours ago

சிக்ஸர் மூலம் டெஸ்ட் அரங்கில் உலக சாதனை படைத்த ஹெட் மேன் ரோஹித்

ஜோதிடம்9 hours ago

இன்றைய ராசிபலன்கள் 20.10.2019

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending