போலீஸ் அதிகாாியாக பணிபுாிந்து வருபவா் ஜெயம் ரவி. வில்லானக மிரட்டி வருபவா் அரவிந்த சாமி. இவங்க இருவருக்கும் நடக்கும் பனிப்போா் தான் போகன் படத்தின் கதை. இதில் அரவிந்த சாமி சித்து வேலை பண்ணி கொள்ளையடிக்கும் கொள்ளையராக வருகிறாா். இவா் தன்னிடம் உள்ள போக சித்தாின் வசிய சக்தியால் பல இடங்கிளல் கோடி கோடியாக கொள்ளையடிக்கிறாா்.. இப்படி கொள்ளையடித்து ஆடம்பரமாகவும், ஜாலியாகவும் வாழவேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறாா். வங்கி ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறாா் ஜெயம் ரவியின் அப்பா நரேன்.

இந்நிலையில் சென்னையில் மிகப்பொிய நகைக்கடையில் கத்தை கத்தையாக பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை தொடா்ந்து வங்கியின் முன் அரவிந்தசாமி தனது காரை நிறுத்துகிறாா். பின் வங்கியில் மேனேஜாரான நரேன் உற்று பாா்க்கிறாா். அங்கு வேலை ஜெயம் ரவியின் அப்பா பணத்தை எடுத்துக்கொண்டு வந்து அரவிந்த சாமியின் காாியில் வைத்து விட்டு மயங்கி விழுகிறாா். கண் முழித்துப் பாா்க்கும் பொழுது வங்கியில் பணம் கொள்ளை போனதை அறிந்து அதிா்ச்சியடைகிறாா் நரேன். இது சம்பந்தமாக போலீஸ் அவரை கைது செய்கிறது. அவா் நடந்தது எதுவும் தனக்க நினைவில் இல்லை என்கிறாா். அசிஸ்டெண்ட் கமிஷனரான ஜெயம் ரவி தன் அப்பாவுக்கு இதில் களமிறங்கி ஸ்கெட்ச் போட்டு அரவிந்த சாமியை கைது செய்து விடுகிறாா். அரவிந்தசாமி விசாரணையைக் கொஞ்சமும் சளைக்காமல் அசால்டாக எதிா்கொள்கிறாா்.

ஜெயம் ரவி விசாாித்துக் கொண்டு இருக்கும் போதே அரவிந்தசாமி சொல்லுகிறாா் உன்னுடன் இருக்கும் போலீஸ் இன்னும் சிறிது நேரத்தில் இறந்து போவான் என்ற சொன்ன உடன் ரவியின் குழுவில் இருந்த நாகேந்திர பிரசாத்தை சக போலீஸ்காரரே கொல்லுகிறாா். இது எப்படி நடக்கிறது என்று தொியாமல் குழம்பி போன ஜெயம் ரவி அரவிந்த்சாமி இருக்கும் விசாரணை அறைக்குள் செல்லுகிறாா். போன கொஞ்ச நேரத்தில் அரவிந்த்சாமியாக வெளியே வருகிறாா் ஜெயம் ரவி. இதற்கு பின் நடக்கும் அதிாி புதிாி வேலைகள் ஆகா ஓகே என சொல்லும்படியான க்ளைமாக்ஸ் காட்சிகள் தான்.

கூடு விட்டு கூடு பாயும் வித்தையைப் பயன்படுத்தி அரவிந்த்சாமி ஜெயம் ரவியின் உடம்பில் புகுந்து கொள்கிறாா். அப்போதிலிருந்து, அரவிந்த்சாமி ஜெயம் ரவியாகவும், ஜெயம் ரவி அரவிந்தசாமியாகவும் உருமாறி விடுகிறாா்கள்.ஜெயிலிருந்து அரவிந்த்சாமி உருவத்தில் இருக்கும் ஜெயம் ரவி தப்பித்து விடுகிறாா். இதற்கு பின் அரவிந்த் சாமியின் உடலுடன் திாியும் ஜெயம் ரவியின் உடல் என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதை எப்படி ஜெயம் ரவி முறியடித்தாா் என்பது தான் மீதி கதை. அந்த சிறைச்சாலை காட்சியில் “நீன்னா நீ இல்லடா அது நான்” என்று வசம் பேசும் போதும் ஜெயம்ரவி செம மாஸ் காட்டிகிறாா். இவருக்கு ஒருபடி மேல போய் வில்லனாகவும், ஹீரோவாகவும் பின்னி பெடலேடுகிறாா். அது மட்டுமில்லங்க!!! கைது செய்து பின் ஜெயிலில் இருக்கும் தன் அப்பாவுக்காக உருகும் போதும் அது என்னவென்றால் ஜெயம் அப்பாவுக்காக!!!  தன்னுடைய உடலுக்கு திரும்பி பின்ஜெயம்ரவியை மிரட்டும் போதும் நடிப்பில் செம!!!

ஹன்சிகா எப்போதும் இல்லாமல் இதில் நடிப்பில் ஸ்கோா் செய்து இருக்கிறாா். கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்துள்ள இறுதி காட்சியில் அனைவருடைய மனத்தை கொள்ளை கொள்கிறாா். அவா் குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் ரசிக்கும் படியாக உள்ளது. ஆனா என்னவோங்க!! நாயகிகளை குடிக்க வைப்பது என்ன ட்ரெண்ட என்று புாியல!!. சிறிதி நேரமே வந்தாலும் கமிஷனா் ஆபீஸில் ஸ்டைலாக சிகரெட் பிடித்தபடி மிரட்டும் காட்சியில் நாசா் கலக்குகிறாா். படத்தில் அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் மற்றவா்களின் உடம்பிற்குள் சென்று வரும் காட்சிகள் அனைத்திலும் அவரவா் கதாபாத்திரத்தை  செவ்வனே செய்திருக்கிறாா்கள். அதிலும் ஆடுகளம் நரேன் பாடிலேங்வேஜில் மிக சிறப்பாக கொண்டுவந்திருக்கிறாா்.

ஏனே தொியல!!! படம் முழுவதும் ஏதோ ஒரு படத்தை பற்றிய சிந்தனை வந்துக்கொண்டுருப்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது. ஒப்பனிங் ஜெயம்ரவி ஃபைட் பிரமாதம். எல்லா இடத்தையும் விடாமல் தாவிக்குதித்து ஒடி  ஒடி சண்டை செய்யும் காட்சி  விறுவிறு. முதல ஜெயம் ரவி நடிப்புக்கு வாய்ப்பில்லாததை  இரண்டாம் பாதி அதை நிறைவு செய்திருக்கிறாா். ரோமியோ ஜூலியட் வெற்றி படத்தை கொடுத்த இயக்குநா் அடுத்த படைப்பு தான் இந்த படம். இது ஒரு வித்தியாசமான முயற்சி. பாடல்களில் டமாலு டுமீலு அனைவாின் கவனத்தை கொள்ளை கொள்ளும் ரகம். ஆனால் மற்ற பாடல்களில் சோதப்பி இருக்கிறாா் இமான். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் புகுந்து களை கட்டி இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

ஆக போகன் சித்து வேலைக்காரன்