சென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பஸ்ஸின் படியில் நின்றவாறே பயணித்தனர். கீழே கத்தியை தீப்பொறி பறக்கும்படி உரசிக்கொண்டு சென்றனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற செயல்களை கருத்தில் கொண்டு மாநில கல்லூரியில் கமிஷனர் விஸ்வநாதன் ஒரு விழிப்புணர்வு கூட்டத்தை இன்று நடத்தினார்.

அதில் இலக்கியங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் நல்ல விசயங்களை அறிவுரையாக கூறினார். தான் பணி செய்த மாவட்டங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் பேசினார்.

போராட்டங்களை நம்பி வீண் போகாதீர்கள் இப்போது உள்ள போராட்டங்களில் வியாபார நோக்கமே அதிகம் உள்ளது என கமிஷனர் கூறினார். இது போல பஸ்டே கொண்டாடும் நபர்கள் பட்டாக்கத்தியை உரசும் நபர்கள் மாணவர்களுக்கு அன்பான முறையில் எச்சரிக்கை விடுத்தார்.