இயக்குனர் பாரதி ராஜா மூலமாக மண்வாசனை திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்துள்ளார்.

ரேவதியும், திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் விளம்பரப் பட இயக்குனருமான சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திரைப்படத்தில் அறிமுகமான காலம் முதல் 90 களின் இறுதி வரை இடைவெளி இல்லாது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்.

இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாததால், மிகுந்த மனக் கவலையுடன் வாழ்ந்து வந்தார். பின்னர், சுரேஷ் மேனனுடனான விவாகரத்துப் பின் சமூக ஆர்வலராகவும் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி மகி என்ற பெண் குழந்தையை வளர்த்து வருகிறார். அந்தக் குழந்தையை அவரின் தத்துக் குழந்தை என்று ஊடகங்களில் செய்தி வந்தது.

ஆனால், தற்போது ரேவதி, மகி என்னுடைய குழந்தை. சோதனைக் குழாய் மூலம் தான் கருவுற்றுப் பெற்றெடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

தற்போது, தனது 5 வயதான குழந்தை மகியை வளர்ப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறாராம் ரேவதி.