மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’ படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதி ராவ். இவர் 15 வயதில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, எனக்கு 15 வயது இருக்கும்போது கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தோம். அங்கு பெண்கள் அனைவரும் சேலை அணிந்துகொண்டுதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பதால் நானும் சேலை அணிந்து கொண்டு சாமி தரிசனத்திற்காக கோயில் வரிசையில் நின்றிருந்தேன்.

அப்போது ஒரு நபர் எனது வயிற்றில் கை வைத்தார். இரண்டு, மூன்று தடவை திடீரென்று கிள்ளினார். இதனால் கோபமடைந்த நான் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். ஆனால் அந்த நபர் எதுவும் நடக்காததது போன்று என்னவென்று கேட்டுக் கொண்டிருந்தார். உடனே, அங்கிருந்த காவலர்கள் அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர்.

நமது சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதிதி ராவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்களை எழுப்பியுள்ளது. ஏற்கெனவே, பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி அனைத்து தலைப்பு செய்திகளிலும் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து அதிதி ராவும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை பற்றி குறித்து வெளிப்படையாக பேசி தலைப்பு செய்திகளில் இடம்பெற்றிருக்கிறார்.