சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சிம்ரன், விஜய்சேதுபதி நடித்துள்ள படம் பேட்ட. ஜனவரி மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு மரண மாஸ் பாடல் வெளியாகி பயங்கர ஹிட்டானது.

ஒடிசா இசைக்கலைஞர்கள் மரண அடி அடித்து இசையமைத்து இருப்பார்கள். புதுமையான இசை, பழக்கமான, அதே வழக்கத்தோடு மெட்ராஸ் தமிழில் அனிருத் ஜமாய்த்திருப்பார். பாட்டை கேட்டவுடன் நடமாடுகிறார்கள் குட்டீசுகள். இதுதான் தலைவரின் ஹிட்டோ என்று தோன்றும். இதையடுத்து இரண்டாவது சிங்கிள் டிராக் உல்லாலா பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதலயும் மரண மாஸாத்தான் மியூசிக் இருக்கும். ஏன்னா அனிருத்தின் அடி அப்படி!