மீண்டும் கனா காணும் காலங்கள்

விஜய் டீவியில் சூப்பர் ஹிட் தொடர் கணா காணும் காலங்கள். 2006ம் ஆண்டில் பள்ளி மாணவ மாணவிகளிம்ன் குறும்பு, காதல், நகைச்சுவை போன்றவைகளை நம் கண் முன்னே காட்டியது இந்த தொடர். இதனாலயே பலரது வரவேற்பை பெற்றது இந்த தொடர். இந்த தொடரில் நடித்த பல புது முகங்கள் இன்று சினிமாக்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

இந்த அளவிற்கு வரவேற்பு பெற்ற இந்த தொடர் தற்போது மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விஜய் டீவியின் மற்றொரு சேனலான விஜய் சூப்பர் என்ற சேனலில் இந்த தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பிரஜன் நடித்த காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல தொடர்கள் இந்த சேனலில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.