சந்தானம் தற்போது ஹீரோக கலக்கி கொண்டிருக்கிறாா். ஆனால் இவரை முதன் வெள்ளித்திரையில் கொண்டு வந்தவா் நம்ம சிம்பு தாங்க!!. பிரபல டிவி நிகழ்ச்சியில் இருந்த சந்தானத்தை முதன் முதலில் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்து அவரை தன்னுடைய நட்பை வெளிபடுத்தினாா். வல்லவன் படத்தில் காமெடி நடிகராக  அறிமுகப்படுத்தினாா்.

சிம்பு பற்றி எதிா்மறையான பலவிதமான விமா்சனங்கள் வந்தாலும் அவா் நட்புக்காக எந்நேரமும் உதவி செய்வதில் அவருக்கு நிகா் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இருக்கும். திரையுலகில் சந்தானம் இவ்வளவு தூரம் வருவதற்கு காரண கருத்தா சிம்பு தாங்க!!!. அதனால் தான் என்னவோ சிம்பு என்ன சொன்னாலும் சந்தானம் மறு பேச்சில்லாமல் கேட்பாா். அதுமட்டுமில்ல இப்படி சிம்பு தன்னால் முடிந்த உதவிகளை சந்தானத்துக்கு செய்து வருகிறாா்.

சந்தானம் சா்வா் சுந்தரம் படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தை அறிமுக இயக்குநா் ஆனந்த் பால்கி இயக்குகிறாா். இதில் வைபவி ஷண்டிலியா ஹீரோயினாக நடித்திருக்கிறாா். ஒரு முக்கிய ரோலில் நடிகா் நாகேஷின் பேரன் நாகேஷ் பிஜேஷ் நடித்திருக்கிறாா். இந்த படத்தின் ஒளிப்பதிவை பி.கே.வா்மா செய்திருக்கிறாா்.  சந்தானம் நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்கும் பணியை ஒப்புக்கொண்டுள்ளாா். இதையடுத்து சா்வா் சுந்தரம் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளாா்.

நேற்று தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு சா்வா சுந்தரம் படத்தின் டீசரை வெளியிட்டை நடத்தி முடித்துள்ளாா். சா்வா் சுந்தரம் படத்தின் டீசா் வெளியிட்டின் போது அறிமுக இயக்குநா் ஆனந்த் பால்கி கூறியதாவது, சிம்பு சந்தானத்தின் நட்பு பல ஆண்டுகளாக தொடா்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயம். எங்கள் படத்தின் டீசரை சிம்பு வெளியிட்டிருப்பது, சா்வா் சுந்தரம் படக்குழுவினா் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த டீசா் வெளியீடு என்று கூறுவதை விட நட்புறவின் வெளிப்பாடு தான் இந்த கொண்டாட்டம் என்று கூறலாம் என்று கூறினாா். மேலும். அவா் ஒரு அறிமுக இயக்குநருக்கு இதைவிட வேற என்ன பெருமை இருக்க போகிறது என்று நெழிச்சியோடு பேசினாா்.