Connect with us

க்ரைம்

மீண்டும் தன் வாயால் வம்பில் மாட்டிக்கொண்ட நித்தியானத்த…! களமிறங்கிய காவல்துறை…?

Published

on

ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவர் லிங்கத்தை மீட்டுத்தர வேண்டும் என்று சாமியார் நித்யானந்தா மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காவேரிபுரம் கிராமம் பாலவாடி பகுதியை சேர்ந்த சக்திவேல், வேலுசாமி மற்றும் சிலர் கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சாமியார் நித்யானந்தா மீது ஒரு புகார் மனுவை கொடுத்தனர்.

அதில் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த கோவிலானது மேட்டூர் அணை கட்டும்போது இடமாற்றம் செய்யப்பட்டு பாலவாடி கிராமத்தில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமியார் நித்யானந்தா வெளியிட்ட வீடியோவில், மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கியுள்ள சிவன் கோவிலை நான்தான் போன ஜென்மத்தில் கட்டினேன், அங்கு இருந்த மூலவர் லிங்க சிலை தற்போது தன்னிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரிடம் இருந்து ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவர் லிங்கத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்நிலையில், புகாரின் அடிப்படையில் மேட்டூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்த மூலவர் லிங்கம் சாமியார் நித்யானந்தாவிடம் தான் இருக்கிறதா? இல்லை அவர் தனது சீடர்களை குஷிப்படுத்த இப்படி சொன்னாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர் அணை ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவர் லிங்கம் தன்னிடம் உள்ளதாக சாமியார் நித்யானந்தா பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீசார் தலையிட்டு விசாரணை நடத்தி சாமியார் நித்யானந்தாவிடம் இருந்து மூலவர் லிங்கத்தின் சிலையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murder
செய்திகள்33 mins ago

அண்ணன் மீது காதல்… தங்கையை தடுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்….

செய்திகள்1 hour ago

காதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்

சினிமா செய்திகள்2 hours ago

எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

adithya varma
செய்திகள்2 hours ago

அடுத்த விக்ரம் துருவ்! மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..

meems
செய்திகள்3 hours ago

பெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்

செய்திகள்3 hours ago

இட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை

சினிமா செய்திகள்4 hours ago

நன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்

kaithi
செய்திகள்5 hours ago

தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்

nayanthara
செய்திகள்6 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்5 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்20 hours ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

valimai
செய்திகள்3 days ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்3 days ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்5 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை3 days ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

Trending