சின்னத்திரை தொகுப்பாளினிகளில் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் ரம்யா. தொலைக்காச்டி தவிர சினிமா விழாக்களிலும் பங்கேற்று வந்தார். எல்லோரையும் போலவே அவருக்கும் வெள்ளிதிரை ஆசை வந்தது. மொழி,மங்காத்தா மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி ஆகிய படங்களில் நடித்தார். ஓ காதல் கண்மனியில் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து சின்னத்திரை  நிகழ்ச்சிகளை தவிர்த்துவந்தார்.

சினிமாவில் முன்னனி இடத்தை பிடிக்கவேண்டும் என்று மும்முரமாக ஈடுபட்டார். ஆனால் அவரது கனவு பலிக்கவில்லை. சினிமாவை நம்பி சின்னத்திரையையும் ஒதுக்கினால் பிழைப்பு என்ன ஆவது என நினைத்தாரோ என்னவோ தற்போது மீண்டும் சின்னத்திரையில் தரிசனம் தருகிறார். இனி முழு நேர சின்னத்திரை நாயகியாக உறுதி எடுத்துள்ளாராம் ரம்யா

வாழ்த்துக்கள் ரம்யா!!!