காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாலாஜி மோகன். இவர் நடிகர் தனுஷை வைத்து இயக்கிய திரைப்படம் மாரி. நடிகர் தனுஷின் மாறுப்பட்ட தோற்றதில் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்ப்பை பெற்றது. தற்போது அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. மாரி 2வின் கதை மற்றும் திரைக்கதை வேலைகள் முற்றிலும் முடிவுற்ற நிலையில், மாரி படத்தை காட்டிலும் அதன் இரண்டாம் பாகமான மாரி 2 ரசிகர்களை அதிகம் கவரும் என அப்படக்குழுவினர் எதிர்ப்பார்கின்றனர்.