தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிற விஷயம் என்னவென்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் இருந்து மன அழுத்தம் காரணமாக ஒவியா வெளியேறிவிட்டார். இது ஓவியாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  ஓவியாவின் வெளியேற்றத்துக்கு ஆரவ் உடனான காதல் ஒருபக்கம் இருந்தாலும் ஜுலி, ஓவியா மீது போட்ட அபாண்டமான குற்றச்சாட்டும், அதைத் தொடர்ந்து ஓவியா ஓரங்கட்டப்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

அதேபோல், ஆரம்பத்தில் ஜுலி ஒரங்கட்டப்படும் சமயத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த பரணியையும் ஒருகட்டத்தில் ஜுலி கழற்றிவிட்டார். பரணி சுவர் ஏறி குதித்து வெளியேற முயற்சித்த சமயத்திலும் மற்ற போட்டியாளர்களைப் போல் இவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இதை கமல் ஏற்கெனவே ஒருமுறை கேட்டிருந்தாலும், தற்போது ஜுலி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் மறுபடியும் கமல் ஜுலியிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். அப்போது ஜுலி தான் செய்தது தவறுதான் என்றும், பரணியை சந்தித்து மன்னிப்பு கேட்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜுலி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் பரணியை சந்தித்து, அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். பரணியை பார்க்கப் போன ஜுலி தனது முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டு சென்றுள்ளார். ஏனென்றால், மக்கள் மத்தியில் ஜுலிக்கு ரொம்பவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒருவேளை தன்னை யாரும் அடையாளம் கண்டுகொண்டால் அந்த எதிர்ப்பை ஏதாவது ஒரு ரூபத்தில் தன்மீது காட்டி விடுவார்களோ என்ற பயத்தில்தான் முகத்தை மூடிக் கொண்டு சென்று பரணியை சந்தித்தாக கூறப்படுகிறது.

இருப்பினும், சிலர் அது ஜுலிதான் என்பதை தெரிந்துகொண்டு அவர் வந்த வாகனத்தின் பின்னாலேயே அவரை பின்தொடர்ந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. பரணியிடம் மன்னிப்பு கேட்க முகமூடி அணிந்து ஜுலி சென்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  ஜல்லிக்கட்டு சமயத்தில் உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்த ஜுலியின் முகம், தற்போது வெளியில் காட்ட முடியாத நிலையில் மாறியுள்ளது அவருடைய செய்கைகளாலேயே என்று பொதுமக்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.