பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவதி; திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் இந்த படத்தை வெள்யிட இந்தியாவின் ஒருசில மாநிலங்கள் தடைவிதித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை வெளியிட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி துணிச்சலாக ஆதரவு கொடுத்துள்ளார். ‘பத்மாவதி’ படத்தை மேற்குவங்கத்தில் திரையிட அனைத்து பாதுகாப்பு வசதியும் செய்து தர தயாராக இருப்பதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு ‘பத்மாவதி’ படத்தை எதிர்த்து வரும் ஒருசில அமைப்புகள் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்மாவதி’ படத்திற்கு ஆதரவு கொடுத்த மம்தாவின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு என ராஜபுத்ர சமுதாய தலைவர் அறிவித்துள்ளார். இந்த சர்ச்சைகுரிய அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.