அட்லி, விஜய் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் சில அரசியல் பிரமுகர்களால் சர்ச்சைக்குள்ளான நிலையில் இன்னொரு பக்கம் இப்படத்திற்கு சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ‘மெர்சல்’ படத்திற்கு சமீபத்தில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த பட சர்ச்சை குறித்து, ‘ஏன் ரஜினிகாந்த எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை?’ என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் ரஜினிகாந்தும் ‘மெர்சலு’க்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘மெர்சலி’ல் முக்கியமான ஒரு பிரச்சனை பேசப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

         

 

    ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன் ‘மெர்சல்’ பட விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்த நிலையில் நேற்று நடிகர் விஜய், இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர்கள் முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி முதலானோர் கமல்ஹாசனுக்கு ‘மெர்சல்’ படத்தை போட்டு காட்டினர். படத்தை பார்த்து முடித்ததும் படக்குழுவினருக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.