‘மெர்சல் ஒரிஜினல் நாயகனும் ஜெராக்ஸ் காப்பிகளும்

உலக நாயகன் கமல்ஹாசன் மூன்று வேடத்தில் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி தான் ‘மெர்சல்’ என்ற விமர்சனம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது. அதற்கு காரணம் பாஜக தமிழக தலைவர்களான தமிழிசை மற்றும் எச்.ராஜா என்று கூறினால் மிகையாகாது.

இந்த நிலையில் பல சோதனைகளை சந்தித்து வரும் ‘மெர்சல்’ திரைப்படத்தை இன்று கமல்ஹாசன் பார்த்தார். அவருடன் விஜ்ய, மற்றும் இயக்குனர் அட்லியும் படம் பார்த்தனர்.

கமல்ஹாசனுடன் அட்லி மற்றும் விஜய் இருக்கும் புகைப்படத்தையும் அட்லி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில் இந்த புகைப்படத்தின் பின்னணியில் அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் போஸ்டர் உள்ளது. தான் காப்பி அடித்ததை அட்லி ஒப்புக்கொண்டுள்ளரா? என்பதையே இந்த புகைப்படம் உணர்த்துகிறது.