இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தின் தமிழக வசூல் புதிய சாதனையை செய்துள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரிந்தி’ திரைப்படம் வரும் வெள்ளியன்று அதாவது அக்டோபர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் தெலுங்கு மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலகெங்கும் உள்ள தெலுங்கு பேசும் விஜய் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

தெலுங்கிலும் ‘யூஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் தமிழகத்தை போலவே தெலுங்கு மாநிலங்களிலும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.