‘மெர்சல்’ படத்துக்கு பின்னணி இசை சேர்ப்பு தொடக்கம்


விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள படம் ‘மெர்சல்’. தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பாடல்களுக்கு இசையமைத்துவிட்ட அவர், தற்போது பின்னணி இசை அமைக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார். 20 முதல் 30 நாட்களுக்குள் அவர் பின்னணி இசையை முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாவதாக கூறப்படுகிறது.