Shane Watson – ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது ரத்தகாயத்துடன் வாட்சன் விளையாடியது தற்போதுதான் தெரியவந்துள்ளது.

2 மாதமாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில், சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்த அணிக்காக விளையாடிய வாட்சன் 80 ரன்கள் எடுத்து தனி ஒருவனாக அணியை வெற்றி பெற முயற்சி செய்தார். அதன்பின் கேட்ச் கொடுத்து அவர் அவுட் ஆனார். தற்போது அவர் காயத்துடன் விளையாடியது தெரியவந்துள்ளது.

ஹர்பஜன் சிங் போட்ட டிவிட் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரன் எடுக்க வாட்சன் ஓடியபோது டைவ் அடித்த போது அவரத் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால், அதை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவர் அவுட் ஆனபின்னரே இந்த விவகாரம் மற்றவர்களுக்கு தெரியவந்தது. அவரது காலில் 6 தையல்கள் போடப்பட்டது.

இதையடுத்து, ரத்த காயங்களுடன் அவர் விளையாடும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வாட்சனை பாராட்டி வருகின்றனர்.