ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24

மோகன் ராஜா படத்தில் நடிக்கும் விஜய் வசந்த்!!!

03:08 மணி

தோழா, சரோஜா, நாடோடிகள் போன்ற படங்களில் நடித்தவர் விஜய் வசந்த் தற்போது அவர் நடித்த சென்னை-600028 II மற்றும் அச்சமின்றி படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது  மோகன் ராஜா இயக்கத்தில் சிவகர்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படம் வேலைக்காரன். இப்படத்தில் சினேகா,பிரகாஷ்ராஜ்,தம்பி ராமையா, ரோபோ சங்கர், R.J பாலாஜி, சதீஷ் என பலர் நடிகின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்துள்ளது. இப்படத்தில் ஒரு பாடல் மற்றும் சண்டை காட்சிகள் ஆகியவற்றை படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய் வசந்த் நடிக்க ஒப்பதந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின அனால் எம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை படகுழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

வேலைக்காரன் படத்தில் சேரியை சார்ந்தவராக சிவாகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்திற்காக ரூ5 கோடி செலவில் சேரி ஒன்றை நிருவியுள்ளனர். இதில் 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மேலும் 20 நாட்கள் சென்னையிலும் 35 நாட்கள் மலேசியாவிலும் சென்று நடத்த உள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற மே-1 தேதி அஜித் பிறந்தநாளன்று வெளியிடவுள்ளனர்.

 

(Visited 11 times, 1 visits today)
The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com