Connect with us

செய்திகள்

மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமல்படுத்திய போலீசார்..குழந்தை கண்முன்பே தந்தையை தாக்கும் காட்சிகள் 

Published

on

மோட்டார் வாகன சட்டம்: குழந்தை கண்முன்பே தந்தையை போலீசார் தாக்கும் காட்சிகள்

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் 10 ஆயிரம் ரூபாய் , சீட் பெல்ட் அணியாமல் வாகனம்
ஓட்டுபவர்களுக்கான அபராதம் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட இந்தப் புதிய சட்டம், இதன்பின்னர் வாகன
ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் என நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், சித்தார்த் நகர் மாவட்டத்தில், ரிங்கு பாண்டே என்பவர்
குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அவரைப் பிடித்த போலீஸ் அதிகாரிகள் இருவர், சரமாரியாக அவரைத் தாக்கும் வீடியோ ஒன்று வெளியானது.

“அது என் தவறு என்றால், நீங்கள் என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால் அடிக்காதீர்கள்.

என்ன தவறு செய்தேன் எனச் சொல்லுங்கள்” என்று கதறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆனால், அவர் சொல்வதைக் கேட்காத அதிகாரிகள், குழந்தையின் முன்பே கண்மூடித்தனமாகத் அவரை கண்மூடித்தனமாக தாக்கினர். தரையில் இழுத்துப்போட்டு ஷூ காலாலும் கைகளாலும்
இரண்டு போலீஸாரும் மாறி மாறித் தாக்குகின்றனர். வீடியோ காட்சியின் முடிவில், வண்டியின் சாவியை போலீஸ் கேட்க அதற்கு, “நான் என்ன தவறு செய்தேன் எனக் கூறுங்கள். அதன்பிறகு சாவியைத் தருகிறேன்” என்று பேசுகிறார் ரிங்கு பாண்டே.

இந்த வீடியோ வைரலாகப் பரவ, வண்டிக்கு சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்ததால்தான் அவரை போலீஸார் தாக்கினர் எனச் செய்தி பரவியது.

ஆனால், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தர்ம் வீர் சிங் என்ற போலீஸ் உயர் அதிகாரி, தாக்குதல் நடத்திய போலீஸ் என கண்டறியப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வீரேந்திர மிஸ்ரா மற்றும்
தலைமை கான்ஸ்டபிள் மகேந்திர பிரசாத் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
மேலும், “வாகனத்தை ஓட்டிவந்தவர் குடிபோதையிலிருந்ததாக இரண்டு போலீஸ் அதிகாரிகளும்
தெரிவித்தாகவும், இருப்பினும், இரண்டு போலீஸ்காரர்களும் அவரை கடுமையாகத் தாக்கி, தரையில் தள்ளி மோசமாக நடந்து கொண்ட போது சீருடையிலிருந்தனர். இது, காவல்துறைக்கு அவமானகரமான செயல் என்றும், அவர்களை சஸ்பெண்டு செய்துள்ளதாகவும், விரிவான விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

https://twitter.com/i/status/1172375344063467520

0

அரசியல்14 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்16 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending