நடிகர் தனுஷ் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தளித்துள்ளார்.

 

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. கவுதம் மேனன்-தனுஷ் இருவரும் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படத்தின் டீசரை வெளியிட்டு நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தளித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசரை வைத்துப் பார்க்கும்போது காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகளுக்கு கவுதம் மேனன் மிகுந்த முக்கியத்துவம் அளித்திருக்கிறார். இதனால் இருவேறு விதமான தோற்றங்களில் தனுஷ் வரும் இப்படத்தின் டீசர் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.