ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் மம்மூட்டி???

08:33 காலை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள நடிகர் மம்மூட்டி இணைந்து நடித்த படம் தளபதி இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இன்றும் ரசிகர்களிடையே பேசும் படமாக உள்ளது.

தற்போது நடிகர் மம்மூட்டி ஒரு பேட்டியில் கூறும்  போது ரஜினியை இயக்குவது தன் வாழ்நாள் கனவு என கூறியுள்ளார்.

மேலும்  1997ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் பூதக்கண்ணாடி. இந்த படத்தில் ரஜினியை நடிக்க வைக்க , படத்தின் கதையை ரஜினியிடம் கூறியதாகவும், ஆனால் ரஜினி அதில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும், அதனால் அவரை மேலும் வற்புறுத்தாமல் நானே நடித்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த நடித்த 2.0 படம் தீபாவளி அன்று  வெளியிட  உள்ளனர்.  மேலும் இதை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  இந்நிலையில்  மம்மூட்டியின் இந்த ஆசையை ரஜினி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(Visited 22 times, 1 visits today)
The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com