தமிழ் திரையுலகில் முக்கிய இடம் சத்யா மூவிசுக்கு உண்டு. எம்.ஜி.ஆர் நடித்த பல வெற்றி படங்களை தந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்திற்கு இது 50வது ஆண்டு. இதனை ரசிகர்களுடன் கோலாகலமாக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. அதனபடி இவர்களது எவர்கிரீன் தயாரிப்பான ரஜினி நடித்த பாட்ஷா படத்தை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி வெளியிட உள்ளனர்.

ஆர் எம் வீரப்பனின் மகன் தங்கராஜ் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரது சம்மதத்தை பெற்றார். 5.1 ஒலி அமைப்புகளுடன் கூடிய நவீன  டிஜிட்டல் பதிப்பில் உருவாகி உள்ளது பாட்ஷா. இந்த நவீன பாட்ஷாவின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசர் ரஜினியை மிகவும் கவர்ந்துள்ளதாம்.

இது குறித்து விளக்கம் அளிக்க ரஜினியை சந்தித்தார் தங்கராஜ். அப்போது அந்த படத்தில் புகுத்தப்பட்ட நவீன டெக்னாலஜியை பற்றி விவரித்துள்ளார். இதனை கேட்டு மகிழந்த ரஜினி பாட்ஷா படம் வெற்றி பெற ஆர்.எம்.வீ. செய்த யுக்திகளையும் பகிந்துகொண்டாராம்.