இந்திய அளவில் மிகப்பெரிய சாதனை படைத்த படம் பாகுபலி 2. பிரபாஸ்,அனுஷ்கா,தமன்னா மற்றும் சத்யராஜ் நடித்த இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கினார். இது போல் ஒரு படம் இனி இந்தியாவில் வருவதே கடினம் என்று பலராலும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சுமார் ரூ.1700 கோடிவரை வசூலித்து மற்ற படங்கள் நெருங்க முடியாத இடத்தை பிடித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் பாகுபலி 2 ஒரு நாட்டில் மட்டும் வசூலில் பின் தங்கியது. ஆம். ஜப்பான் நாட்டில் இந்த படம் டிசம்பர் 29ம் தேதி வெளியானது. அங்குள்ள திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாலும் இப்படம் இதுவரை 5.50 லட்சம் யுஎஸ் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் வெளியான ரஜினியின் முத்து 15 லட்சம் யுஎஸ் டாலர்கள் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.