கமல்ஹாசன் சமீபகாலமாக ஆளும் கட்சியின் தவறுகளை பகிரங்கமாக எடுத்துக் காட்டி வருகிறார். இவரது குற்றச்சாட்டை எதிர்கொள்ளமுடியாத ஆளும் தரப்பும் கமலுக்கு பதில் அறிக்கைகளை கொடுத்து வருகின்றனர். அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளை அவர்களது மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள் என்று கமல்ஹாச்ன் கூறிய உடனே அமைச்சர்களின் மின் அஞ்சல் முகவரிகள் பிரத்யேக தளத்திலிருந்து நீக்கப்பட்டன.

இந்த நிலையில்  முரசொலி 75ம் ஆண்டு பவள விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன் , விழாவுக்கு ரஜினி வருகிறாரா என்று கேட்டேன். வருகிறார் என்றார்கள், அவர் மேடையில் பேசுகிறாரா என்று கேள்வி கேட்டேன். இல்லை என்றார்கள், சரி அப்போ நானும் அவருடனே கீழே அமர்ந்து விடுகிறேன் வம்புல சிக்கமாட்டோம் என்று நினைத்தேன்.

அவர்கள் பத்திரிக்கை கொடுத்துவிட்டு சென்றபின் கண்ணாடியை பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது அட முட்டாள் தற்காப்பா முக்கியம் தன்மானம் தான் முக்கியம் எவ்வளவு பெரிய வாய்ப்பு இது என்று உணர்ந்தே இங்கு பேச வந்தேன் என்றார்..

ரஜினி இந்த விழாவில் மேடையில் பேசாமல் இருந்ததற்கு நிச்சயம் எதற்கு வம்பு என நினைத்திருக்கலாம். இதனைத்தான் கமல் மறைமுகமாக பேசி காட்டினார்.