ரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் தரும் பிறந்த நாள் ஸ்பெஷல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு தனுஷ் ஒரு பிறந்த நாள் விருந்தாக ‘காலா’ படத்தின் செகண்ட் லுக்கை வெளியிடவுள்ளார்

ஆம், இதுகுறித்த அறிவிப்பை சற்றுமுன்னர் தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்த நிலையில் செகண்ட்லுக்கை வரவேற்க இப்போதே ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படம் ‘2.0; திரைப்படம் வெளியான பின்னர் வரும் ஜூலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.