மெட்ரோ ரயிலில் பெண்ணிடம் ஆபாச சைகைக் காட்டியும் அருகில் சென்று சுய இன்பம் செய்தும் அநாகரிகமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி மெட்ரோ ரயிலில் கடந்த வியாழக் கிழமை ஆபாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மெட்ரோ ரயிலில் வழக்கமாக பயணிக்கும் அந்த பெண் தனது இருக்கையில் அமர்ந்திருந்த போது பின்னால் உள்ள நபர் அவரிடம் ஆபாசமான சைகளைக் காட்டியுள்ளார். இதனை அந்தப் பெண் கண்டுகொள்ளாதது போல இருந்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ஆப்பரேஷன் ரூமிலுமா பாலியல் தொல்லை ?– அதிர்ச்சியளிக்கும் சம்பவம் !

இதனை சாதகமாக எடுத்துக்கொண்ட அந்த நபர் இன்னும் ஒருபடி மேலேப் போய் அந்த இடத்திலேயே சுய மைதுனம் செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அடுத்த நிறுத்தத்தில் போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.  உடனடியாக விசாரணையில் ஈடுபட்ட போலிஸார் சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நபரை போலீசார் அடையாளம் கண்டறிந்து, கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  இயக்குநர் கவுதமன் கைது: குறிவைத்து தூக்கும் காவல்துறை!

விசாரணையில் அவர் ஹரியானா மாநிலம், சார்க்கி தாத்ரி மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் என்ற அந்த நபர் இதுபோல பெண் பயணிகளிடம் அவ்வப்போது சில்மிஷம் செய்து வந்ததாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.