ரெவரி: ஹரியானாவில் 19 வயது மாணவியை பாலியல்
பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகளுக்கு உதவிய
இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலம் மஹேந்திரகர் மாவட்டத்தில்,கடந்த 12-ஆம் தேதி            19 வயது மாணவியை கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்று கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து, ஒருபேருந்து நிறுத்ததில் தள்ளவிட்டுச் சென்றது.

இதையும் படிங்க பாஸ்-  சென்னையில் மதக்கலவரத்தைத் தூண்டியதாக இந்து அமைப்பினர் கைது!

மாணவியின் பெற்றோர் தந்த புகாரை அடுத்து,
காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை
மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவி குற்றவாளிகளின்
அடையாளத்தைத் தெரிவித்தார்.

இதையடுத்து, இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான நிஷீ
மற்றும் ராணுவ வீரர் பங்கஜ், மணிஷ் ஆகிய மூன்று பேரின்
படங்களை காவல் துறையினர் வெளியிட்டனர்.

இதையும் படிங்க பாஸ்-  இவருக்கு இதே வேலையா போச்சு.. பாலியல் புகாரில் பாடகர் கைது

இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பங்கஜ் இந்திய
ராணுவத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.

சந்தேகத்தின் பேரில், நிஷீ கைது செய்த காவல் துறையினர்
காவலிலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தவிர மாணவியை பலாத்காரம் செய்தவர்களுக்கு உதவிய
மருத்துவர் சஞ்சீவ் மற்றும் தீனதயாள் ஆகிய இரண்டு பேரை
போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  ஓடைக்கு அழைத்து சென்று மைனர் பெண்ணிடம் உல்லாசம் - வாலிபர் கைது

ராணுவ வீரர் பங்கஜ் மற்றும் மனீஷ் ஆகிய இருவருரையும்
தனிப்படையினர் தேடி வருகின்றனர். இதனிடையே
மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவியை
ஹரியானா மாநில அமைச்சர் பன்வாரி லால் நேரில் சந்தித்து
ஆறுதல் தெரிவித்தார்.