றெக்க நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன்: விஜய்சேதுபதி

11:17 காலை

றெக்க மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன்: விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி ,- லட்சுமிமேனன், கிஷோர்,சதீஷ் நடித்துள்ள  படம் ‘றெக்க’, இப்படத்தை ‘காமன்மேன்’ பி.கணேஷ் தயாரித்துள்ளார்.ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் வெளியிட்டார். இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில்  கலந்துகொண்ட விஜய்சேதுபதி பேசுசியபோது,

இப்போது இங்கே எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரே பதற்றமாக இருக்கிறது.  இந்த இடம்  நான் எதிர்பார்க்க வில்லை. எல்லாமே நீங்கள் கொடுத்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றி, போன வெள்ளிக்கிழமை ஒரு படம் ‘ஆண்டவன் கட்டளை’ வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பாடல்கள் வெளியீட்டுவிழா. இன்னும் இரண்டே வாரத்தில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. படங்கள் வரிசையாக வருவதற்குக் காரணம் நேரம் அப்படி அமைந்தது தானே தவிர இவ்வளவு வேகமாக படங்களில் நடிக்க முடியாது. வெளிவரும் தேதிகள் அப்படி தொடர்ச்சியாக அமைந்து இருக்கிறது.

முதலில் றெக்க மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன் முடியுமா என தயங்கினேன். ஆனால் சிவா கதை சொன்ன விதம் வசனம்  பேசிக்காட்டிய முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. காற்றிலேயே படம் வரைந்து சிவா  என்னென்னவோ செய்தார்.என்னைக் கவர்ந்தார். இந்தக் கதைமேல் நம்பிக்கை வைத்து, என் மேல் நம்பிக்கை வைத்து தயாரிக்க முன்வந்த கணேஷுக்கு நன்றி.  லட்சுமி மேன்னுக்கும் நல்ல பாத்திரம். சதீஷ் அப்படி கலகலப்பாக வருகிறார்.. கே.எஸ்.ரவிகுமார் சாரின் விசிறி நான் ‘தங்கமகன்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். அவருடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் அவர் நடித்திருப்பது படத்துக்கு பலமாகி அழகாக மாறியிருக்கிறது என்றார்.

(Visited 6 times, 1 visits today)
The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812