பாலா இயக்கத்தல், ‘இ4 எண்டர்டெயின்மெண்ட் ‘நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்திருக்கும் படம் ‘வர்மா’ .

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அர்ஜீன் ரெட்டி’ படத்தின் ரீ-மேக். இப்படத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீ-டீமக் செய்யப்படுகிறது.

இதில் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ், ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதியிருக்கிறார். இப்படத்தின் ஹீரோனியாக நடிகை மேகா சவுத்ரி நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விக்ரமின் மகன் துருவின் ‘வர்மா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்-22ஆம் தேதி, விஐடி கல்லுாரியில் பிரம்மாண்டாமாய் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரமின் ‘சாமி 2’ படம் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி ரிலீஸாகிறது. இதனையடுத்து, 22-ஆம் தேதி ‘வர்மா’ திரைப்படத்தின் இசை வெளியீடு, என அடுத்தடுத்த நாள்களில் வெளிவருவதால் திரையுலகில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்ப்பாகிறது.