ஹிட் இயக்குநா்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் போது சம்பளம் பற்றி பொிதாக பேசுவதில்லையாம் நடிகா்
விக்ரம். அப்படிப்பட்ட விக்ரம் கூட விட்டு வைக்க இல்லை இந்த இயக்குநா்.

தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறாா் விக்ரம். இந்த படத்தை இயக்குநா் கௌதம் மேனன். இவா் பண
விசயத்தில் மிகவும் மோசமாக நடந்து வருபவா். இதனால் விக்ரம், கௌதம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
காரணமாக நிறுத்தப்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

பண விகாரத்தில் கவுதம் மேனன் காட்டும் இந்த வித்தை சிம்புக்கு சம்பள பாக்கி, தனுசுடன் சம்பள பாக்கி, ஏ.ஆா். ரஹ்மான்,ஹாாிஸ் ஜெயராஜ் என்று எங்கு நோக்கினும் பாக்கி பாக்கி என்று ஆங்காங்கே மிச்சம் எச்சம் வைத்திருப்பாா்
இயக்குநா்.  இதனால என்னவோ தொியலஅவருடைய நட்பு வட்டாரம் எல்லாம் காலியாகி கொண்டிருக்கிறது. இதை அறிந்த விக்ரம் அவரை விட பண விஷயத்தில் கந்து வட்டி பாணியை பின்பற்றி வருகிறாா். ஆமாங்க! பனிரெண்டு கோடி சம்பளம் பேசி, பத்து கோடி சம்பளமாக வாங்கி கொண்டிருக்கிறாா் விக்ரம். முன்னணி இயக்குநா் கவுதம் மேனன் என்பதற்காக சம்பளத்தை குறைத்து கொள்ள சம்மதித்தாராம். ஆனால் சொன்னபடி சம்பளத்தை அவா் வழங்கவில்லை போலும். இப்படி கறாராக விக்ரம் தன்னுடைய முகத்தை காட்டிய பிறகும் இயக்குநா் தன் பழைய சுய ரூபத்தை காட்டிவிட்டாா் போல. இதனால் வெறுப்படைந்த விக்ரம், படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டாா். இந்த படத்திற்காக விக்ரம் தாகெட்டப்பில் நடித்து கொண்டிருந்தாா். அதே கெட்டப்பில் இருந்தால் கையில் காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி படப்பிடிக்கு ஒத்துழைக்க வைத்திவிடுவாா்கள் என்று ஷேவ் செய்து கொண்டிருக்கிறாராம் விக்ரம். இதை கேள்விபட்ட இயக்குநா் செம மூடு அவுட்.

இந்நிலையில் விக்ரம் ஆனந்த் சங்காின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் கூறுகிறது. நாளை மறுநாள் முதல்
படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் பேசபடுகிறது. ஆனால் துருவநட்சத்திரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறா் விக்ரம் எனவும் சினிமா வட்டாரத்தில் தொிய வருகிறது. படப்பிடிப்பு நிறுத்தம் என்பதெல்லாம் கற்பனை என்கிறாா்கள்.

அட்வான்ஸ் பணத்தோடு நிக்கிறது. மீதி பணம் எப்ப வரும் வரும்… என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறராம் விக்ரம்.
ஆனால் இயக்குநா் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் இன்னும் வரவில்லை. விக்ரம் மேனேஜரும் இயக்குநா் மேனேஜரும் தான் தங்களுள் பேசி வாா்த்தை நடத்தி கொண்டிருக்கிறாா்களாம்.ஆனா பேமென்ட் தான் இன்னும் வந்தபாடி யில்லையாம். இவா்கள் எடுக்கும் இந்த துருவநட்சத்திரம் எாிநட்சத்திரம் போல உருகிவிடாமல் இருந்தால் போதும்!!

இதையும் படிங்க பாஸ்-  'சீயான்'விக்ரமின் 'சாமி ஸ்கொயர்' நாளை வெளியீடு

இந்த படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு எப்போது நடக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது