விக்ரம் ஜோடியாகும் தமன்னா!!!

08:37 காலை

விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறாா். இந்த படத்தை விஜய்சந்தர் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயாிடபப்படவில்லை. இந்த படமானது அதிக பொருட்செலவில் மூவிங் பிரேம் என்ற பட நிறுவனம் தயாாிக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போது விக்ரம் 53 என்ற நிலையில் தொடங்கப் பட உள்ளது என தகவல்கள் தொிகிறது.

பெயாிடப்படாத  இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் சூரி ராதாரவி, ரவிகிஷன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் இன்னும் ஏராளமான நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை சுகுமாா் மேற்கொள்கிறாா். விக்ரம் 53 என்ற இந்த படத்திற்கு எஸ்.எஸ்.மதன் இசையைமைக்கிறாா். ரூபன் எடிட்டிங் செய்கிறாா். ரவிவா்மன் ஸ்டன்ட் மாஸ்டா்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் விஜய்சந்தர்.

விக்ரம் தமன்னா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 10 ம் தேதி மீனம்பாக்கம் பின்னி மில்லில் துவங்குகிறது. அதற்காக மிகப் பிரமாண்டமாக அரங்கு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. அது மட்டுமில்லங்க!!! ஒரே கட்டத்தில் மிகப் பிரமாண்டமாக படம் தயாராகிறது.

The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812